31 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலையானார் நளினி
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும் என்று கூறி நீதிபதிகள் இவர்கள் இருவரை மட்டுமல்லாது, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 6 பேரையும் (நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்) விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக 31 ஆண்டு காலமாக அவர்கள் நடத்தி வந்த சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து வேலூர் சிறையில் இருந்து இன்று நளினி விடுதலை செய்யப்பட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின் நகல்கள் கிடைத்ததையடுத்து விடுதலைக்கான நடைமுறைகள் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று மாலை சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். வேலூர் மத்திய சிறையில் இருந்து முருகன் சாந்தன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.