Category:
Created:
Updated:
மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி மாலதி உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார். கடந்த 8ஆம் தேதி காலமான அவரை அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே வைத்து குடும்பத்தினர் ஜெபம் செய்ததாக தெரிகிறது.
மூன்று நாட்கள் ஜெபம் செய்தால் இறந்த மாலதி மீண்டும் உயிருடன் வருவார் என குடும்பத்தினர் நம்பி ஜெபம் செய்து கொண்டிருந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டுக்காரர்கள் அச்சமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினரை எச்சரித்த பின்னரே மாலதியின் உடல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இறந்தவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்க முடியும் என மூன்று நாட்கள் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக ஜெபம் செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.