Ads
ஐடி கம்பெனிகளில் 50,000 ஊழியர்கள் வரை பணி நீக்கம்
உலகப் பணக்கார்களில் முதலிடத்திலுள்ள எலான் மஸ்க், சமீபத்தில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதோடு, அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., நிதி அதிகாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியானது. இது, உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று சமூகவலைதளங்களில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 11,000 பணியாளார்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, முன்னணி ஐடி நிறுவனங்களில் கடந்த சில வாரங்களில் சுமார் 50,000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
Info
Ads
Latest News
Ads