Category:
Created:
Updated:
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக உள்ளார். அதேபோல் தமிழக பாஜக பிரபலம் இல கணேசன் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கவர்னராக உள்ளார்.
இந்த நிலையில் தற்போது எச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கவர்னராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இருவருமே தென் மாநிலங்களுக்கு தான் கவர்னராக நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.