Category:
Created:
Updated:
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நீட்டிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான கப்ராலை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டார்.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இன்று (26) மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.