Category:
Created:
Updated:
38 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஷேந்திரன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அடித்து கொல்லப்பட்டுள்ளார்.லெவலன் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று, மணிக்கட்டி தோட்டத்தில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்குவதற்கு வருகை தந்துள்ளனர்,இதன்போது இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அடிதடியில் முடிந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய, 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்களை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.