Category:
Created:
Updated:
நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக சிலோன் நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைய உள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே குறிப்பிட்டுள்ளார்.
கப்பலில் 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கப்பல் வந்ததையடுத்து, தரையிறங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.