Category:
Created:
Updated:
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரிஷி சுனக், இன்று (25) சார்லஸ் மன்னரை சந்திப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்றுள்ளார். இதன்போது மன்னர் சார்லஸ், சுனக்கை அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சுனக் பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக் அந்நாட்டின் 57வது பிரதமராகும் நிலையில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் ஆசிய வம்சாவளி நபர் ஆவார்.