Ads
" எமக்கான உணவை நாமே பயிரிடுவோம்"
வடகிழக்கு புணர் வாழ்வு நிறுவனத்தினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையினதும் அனுசரணையில் வீட்டு தோட்டங்களை உருவாக்கும் செயல் திட்டம் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டத்தின் நோக்கம் எமது மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தை நாமே கட்டியெழுப்புவோம் என்ற முக்கிய கருத்திட்டத்துக்கு அமைய இந்த செயல்திட்டம் தமிழரசு கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களினால் வீட்டு தோட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக, சிறப்பட்டி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மரக்கறி கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.தமிழரசு கட்சியின் கோப்பாய் தொகுதி அமைப்பினால் சிறுப்பிட்டி பன்னாலை பகுதியில் இந்த வீட்டுத்தோட்ட செய்கைக்கான மரக்கறி கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
Attachments
Info
Ads
Latest News
Ads