Category:
Created:
Updated:
தனியார் வகுப்பு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் தங்க சங்கிலியை அறுத்த , இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் நபரொருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்மடக்கி பிடிக்கப்பட்ட நபரை இராணுவத்தினர் மீட்டு செல்ல முற்பட்டமையால் பதட்டமான நிலைமை உருவாகிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.