மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்தார் - பந்துல குணவர்தன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரத்மலானை அங்குலானையில் அமைந்துள்ள மக நெகும ஆலோசனை மற்றும் செயற்திட்ட முகாமைத்துவ சேவைகள் நிறுவனத்தின் அலுவலக வளாகத்தை நேற்று மீள திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் 18ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்நிறுவனத்தின் அலுவலக வளாகம் புதியதாக மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் அப்போதைய பிரதமரும் நெடுஞ்சாலை அமைச்சருமான மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்டது.அதன் 18ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அலுவலக வளாகம் அதன் ஸ்தாபகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் புனரமைக்கப்பட்டு மீள திறந்து வைக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்தார்.
அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வீதி வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய போது இந்த நிறுவனம் ஒரு கருத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.