Ads
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில், 22 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்:
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சட்டமூலத்திற்;கு ஆதரவாக 178 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.தேசிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.எதிராக 1 வாக்கு அளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவே எதிராக வாக்களித்தார்.எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் சட்டமூலத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தது.இரட்டை குடியுரிமை ரத்து, 19இல் இருந்த சுயாதீன குழுக்களுக்கு மீள அதிகாரம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கான அம்சங்களுடன் 22ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்மூலம் ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு குறித்த அதிகாரங்கள் வழங்கப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads