Category:
Created:
Updated:
கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை நேற்று (20) இரத்து செய்துள்ளது.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நீர்க்கட்டணம் கட்டணம் செலுத்தாதததை காரணம் காட்டி, எந்தவொரு பாடசாலை நீர் விநியோகமும் துண்டிக்கப்பட மாட்டாது என்றும், நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத் திட்டமொன்றை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.