Category:
Created:
Updated:
கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராட சென்ற 75 வயதுடைய பெண் , முதலை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை நீரில் இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் பொலிஸ், இலங்கை இராணுவம் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.செல்ல கதிர்காமத்தினை சேர்ந்த குறித்த பெண்ணின் சடலம், தற்போது தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.