Category:
Created:
Updated:
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.உயிரிழந்தவர்களின் உறவினர்கள், வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் , சிற்றூழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1987 ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 21,22 திகதிகளில் கடமையில் இருந்த போது வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவம் வைத்தியசாலைக்குள் சூட்டு சம்பவத்தினை மேற்கொண்டு இருந்தனர். இதன் போது வைத்தியர்கள், தாதியர்கள் , பொதுமக்கள் உட்பட்ட 21 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.