Category:
Created:
Updated:
வளர்ந்து வரும் இளம் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் சிறுப்பிட்டி கலைஒளி பகுதியில் போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 99 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள்,1500 மில்லி கிராம் கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளது.இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.