Category:
Created:
Updated:
ஊர்காவல் துறை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட மண்கும்பான் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் , பொலிஸ் கொஸ்தாபிள் ஹரிதாஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய சந்தேக நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து இருந்து 35 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில் போதை ஊசி மருந்து பொருட்கள் கைபெற்றப்பட்டுள்ளது.இந்த நபரினால் அல்லைப்பிட்டி பகுதியில் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளைய தினம் ஊர்காகாவல்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.