Ads
கோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறையவில்லை
கோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.கோதுமை மாவின் விலை, 270 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதே, பாணின் விலையை நாம் அதிகரித்தோம். கோதுமை மாவின் விலை 400 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதிலும், பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை, 100 ரூபாவால் குறைப்பதால், பாணின் விலையை குறைக்க முடியாது.பாண் மற்றும் பணிஸ் விலைகளை குறைக்க வேண்டுமாயின், கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்கள், கோதுமை மாவின் விலையை குறைக்க வேண்டும்.என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads