Ads
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல்மாகாணத்தில்தான் அதிகளவு டெங்கு நோய் பரவுவதாக அந்த பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்தார்.அண்மைகால தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை 61,391 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளதுடன், இதில் மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதற்கு மேலதிகமாக கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்நேரத்தில் கொழும்பு மாநகரசபை உட்பட 31 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை அதிக ஆபத்துள்ளவையாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads