நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்ற போதிலும், ராஜபக்ஷகளும், அவர்களின் சகாக்களும் திருடுவதை நிறுத்தவில்லை : சரத் பொன்சேகா
நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்ற போதிலும், ராஜபக்ஷகளும், அவர்களின் சகாக்களும் இன்று திருடுவதை நிறுத்தவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்களை மீளக் கொண்டுவருவது தொடர்பில் 22 ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் வரவேற்கதக்கது. எனினும், அதற்கான நியமனங்களில் ஜனாதிபதியின் தலையீடு குறைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
அமைச்சர்களை பதவி நீக்குதல், ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வகிக்காதிருப்பது தொடர்பான சரத்தை நிறைவேற்ற பொது வாக்கெடுப்பு வேண்டுமென உயர்நீதிமன்றம் அறித்துள்ளது.
இதற்கு முன்னராக திருத்தங்களில் இது ஏற்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு மாறாக பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் திருத்தம் கொண்டுவருவது அரசியலமைப்பில் உள்ள ஒரு ஓட்டையாக கருதுகிறேன்.
ரணிலை அதிகாரத்துக்கொண்டுவந்த செல்வந்தர்களும் வறுமையில் வாடும் மக்கள் மத்தியிலேயே வசிக்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது. நாட்டின் தனிபநபர் வருமானம் 3,500 டொலர் எனக்கூறுகின்றனர். ஏனைய நாடுகளில் இது 40,000 – 50000 டொலராக காணப்படுகிறது. அவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் வறுமையில் உள்ளமை புலப்படுகிறது.
இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்கள் சாப்பாட்டு பெட்டி வெறுமையாக உள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் கூறினார். அவர் கடந்த காலத்தில் அங்கு சென்று பிச்சையெடுக்கும்போது, சாப்பாட்டு பெட்டிகளை அபகரித்து பார்த்தாரோ எனத் எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு பொறுப்பற்ற கதைகளை கூறுவோரின் வார்த்தைகளுக்கு ஏமாற வேண்டாம் என தெரிவித்தார்.