அரசியலமைப்புக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
நாட்டிற்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான நிலைப்பாடு தொடர்பாக செயலாற்றுவது அவசியமாவதுடன் நல்லிணக்கம் பற்றி மக்களுக்கு வழங்கியுள்ள இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதும் அரசாங்கத்தின் கடமை என்றும் வெளிநாட்டு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அரசின் மனித உரிமைகள் தொடர்பாக வழங்கப்பட்ட இணக்கம் தெரிவித்தல் தொடர்பாக முன்னோக்கிச் செல்வதாகவும், அதற்கிணங்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு, நீதியை நிலைநாட்டுதல், அரச பொறிமுறை தொடர்பாக அனைவரையும் பங்கேற்கச் செய்யும் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன முழு உலகமும் அதனை மிகவும் அவதானத்துடன் நோக்குகிறது.
அத்துடன் வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன ஜனநாயக அபிலாசைகளுக்கு ஏற்ப அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் வெளிநாட்டு அமைச்சர், பாராளுமன்றத்தில் நேற்று (19) சுட்டிக்காட்டினார்.
அதில் சிவில் சட்டம் மற்றும் வர்த்தக சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடிந்தது. எவ்வளவு தான் சிரமமாக இருந்தாலும் அனைத்துத் திட்டங்களையும் செயற்படுத்தி ஏதேனும் கட்டமைப்புக்கு ஊடாக நடை முறைப்படுத்துவதாக வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.