Category:
Created:
Updated:
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அத்துடன், விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அல்லது அதன் சரத்துகள் சிலவற்றைத் திருத்திய பின்னரே அது தொடர்பான வரைபு நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.