28 வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்கள் - நேற்று வரை 59,317 நோயாளர்கள்
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பத்து மாவட்டங்களில் 36 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு தொற்றுநோய் அதிகம் உள்ள வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.கொழும்பு, கம்பஹா, களுத்துறை,,கண்டி, மாத்தளை, காலி, யாழ்ப்பாணம், கல்முனை, புத்தளம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் வைத்திய அதிகாரி பிரிவுகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.தேசிய டெங்கு கட்டுப்பாட்டு நிலையத்தின் தரவு அறிக்கைகளின்படி, 18 Oct 2022 வரை இலங்கையில் 59317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மேலும்இ நீர்கொழும்பு வைத்தியசாலையில் (61) டெங்கு நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கம்பஹா வைத்தியசாலை, பேராதனை வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட இருபத்தெட்டு வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போதைய சூழ்நிலையில்,,டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.