சினிமா செய்திகள்
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
Ads
 ·   ·  52 news
  • 1 members
  • 0 friends

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம்! யாழ் மாநகரமுதல்வர் தெரிவிப்பு!

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார்.பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம் எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் மாநகர முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,எங்களுடைய பிரதேசமானமானது அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றதுஅண்மையில் வெளிவரும் பத்திரிகை செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளை அண்மை காலங்களில் பத்திரைகளில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் எவ்வாறு பாதிக்கப்பட போகின்றார்கள் என்கின்ற அச்சத்தில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய பெரியவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது அதாவது போதை பொருள் வர்த்தகர்களின் பிரதான இலக்காக பாதிக்கப்படுபவராக இருப்பவர்கள் பாடசாலை மாணவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.இந்த பாடசாலை மாணவ மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான போதைப் பொருள் விநியோகம் அண்மை காலங்களிலே அதிகரிக்கப்பட்டு வருகின்றது..எதிர்கால சந்ததி என கருதப்படுகின்ற எங்களுடைய இளைஞர்கள் யுவதிகளை நோக்கி போதை பொருள் வர்த்தகம் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது அதற்குள்ளே அறிந்தும் அறியாமலும் அதனுடைய எதிர்கால விளைவுகளை பற்றி தெரியாது எமது இளைஞர்யுவதிகள் இந்த போதைப் பொருளுக்குள்ளே அடிமையாகி கொண்டிருக்கின்றமை இந்த மண்ணிலே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது அதிலும் விசேடமாக அரசியல் தலைமைகள் சமூகமட்ட பிரதிநிதிகள் அதோடு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி சமூகம் அனைவரதும் கடமையாகும்.எதிர்காலத்தில் இந்த போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.யாழ் மாநகர முதல்வர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாட்டினை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டம் ஒன்றிணைத்து விரைவில் அந்த செயற்பாட்டினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி சமூகத்தினர் மற்றும் பொலிசார் ஆகிய அனைத்து தரப்பினரை ஒன்றிணைத்து எவ்வாறு இந்த போதைப் பொருட்களில் இருந்து எமது மாணவ சமூகத்தை காப்பாற்ற முடியும் என்ற விடயத்தினை அறிந்து அதனை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்க உள்ளோம்.அத்தோடு போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கக் கூடிய விசேட நிலையம் ஒன்றினை யாழ் நகருக்கு அண்மையில் அமைப்பதற்கு யோசித்து வருகின்றோம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் ஆகவே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர் வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும்.எனவே வடக்கில் யாழ் நகருக்கு அண்மையில் ஒரு இடத்தில் புனர் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் அதற்குரிய முயற்சியை எடுத்து வருகின்றேன் அனைவரின் ஒத்துழைப்புடன் அந்த விடயம் விரைவில் கைகூடும் எனவும் தெரிவித்தார்.

  • 241
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads