தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையம் புனரமைக்கும் வரலாற்றுப் பணி ஆரம்பம்
தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் வரலாற்றுப் பணியினை நேற்று முதல் ஆரம்பித்தது.தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடனும் அனுமதியுடனும் நன்கொண்டையாளர்கள் மூலம் யாழ்ப்பாண மரவுரிமை மையத்திற்கு கிடைத்த நிதியில் நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் மந்திரிமனையுடன் சேர்ந்து வளந்துள்ள மரமானது மந்திரிமனையின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் அதன் உறுதித்தன்னையினை சீர்கெடாமல் பாதுகாக்கும் நோக்குடன் வெட்டப்பட்டு மருந்து ஏற்றும் செயற்பாடு நடைபெற்று வருகின்றதுநவ்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் அதன் பழமை மாறாமல் அதன் தனித்துவத்தை பேணிக் கொண்டடு அதற்கே உரிய தனித்துவம் மாறாமல் பகுதி பகுதியாக புனர்நிர்மானம் செய்வதே சிறந்தது யாழ்ப்பாண மரவுரிமை மையம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுநீண்டகாலமாக உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட தமிழரின் முக்கிய மரவுரிமைச் சின்னமாகிய நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினை நிலைகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் கவலைiயும் விசனத்தையும் வெளியிட்டு வருகி;ற நிலையில் குறித்த தமிழரின் மரவுரிமைச் சின்னத்தினை பாதுகாக்கும் செயற்பாடுகளை யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் ஆரம்பிதிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியினையும் ஆறுதலையும் உருவாக்கும்இவ் வரலாற்றுப் பணிக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.