போதை பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பியோகங்கள் தடுப்பது தொடர்பில் பிரதேச செயலகம் மட்டத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது
யாழ் மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை காரணமாக பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல் திட்டம் ஒன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.தெல்லிப்பழை பிரதேச செயலக சிறுவர் சார் உத்தியோகத்தர்கள் மற்றும், தெல்லிப்பழை பொலிசார் மற்றும் பிரதேசமட்ட சிறுவர் நலன் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.இந்த செயல் விழிப்புணர்வுமட்ட செயல் திட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலக செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தலைமையில் இடம் பெற்றது.அத்துடன் இந்த போதைப் பொருள்கலாச்சாரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது சமூகமட்ட பங்களிப்பு எவ்வாறு போலீசாருக்கு உதவியாக இருக்கும் என்பது தொடர்பிலும் இதன் போது தெல்லிப்பழை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் முருகேசுப்பிள்ளை கலாவினோதன் அவர்களினால் இதன் போது தெளிவூட்டப்பட்டது.