Category:
Created:
Updated:
உரிய போசாக்குடன் கூடிய உணவு வேளையைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இந்நாட்டிலுள்ள சனத்தொகையில் 1/5 வீதம் மாத்திரம் என்றும், நாட்டிலுள்ள மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கான செலவு என்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழுவில் தெரியவந்தது.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (18) கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.