Category:
Created:
Updated:
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்று வெகுஜன ஊடக, போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தற்போது வெளிநாட்டிலிருக்கும் பசில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதா? என ஊடகவியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இது தொடர்பாக அமைச்சரவையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.