Ads
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்போது, பல அத்தியாவசிய பொருட்களின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய,
பருப்பு கிலோவொன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
நாட்டரிசி கிலோவொன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும்.
வெள்ளை பச்சையரிசி கிலோவொன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும்,
சீனி கிலோவொன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும்,
கோதுமை மா கிலோவொன்றின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும்.
குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads