Ads
ராஜபக்ஷ குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அரச வருவாயை அதிகரிக்க முடியும் : சஜித் பிரேமதாஸ
மக்கள் மீது வரி விதிக்காது, கடந்த ஒரு தசாப்த காலமாக பல்வேறு ஒப்பந்தங்கள், நிர்மாணப் பணிகள் சார்ந்த கொந்தராத்துகள், கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நமது நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அதன் மூலம் அரச வருவாயை அதிகரிக்க முடியும் எனவும், திருடர்களைப் பிடிப்பதன் மூலம் அவர்களால் திருடப்பட்ட டொலர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலமும் நாட்டின் வருமானத்தைப் பெருக்க முடியும் எனவும், பெரும் தொகை பணம் இவ்வாறு நாட்டிற்கு வெளியேஉள்ளதாகவும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இதுவே உடனடியான ஒரே தீர்வாக அமையமுடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். குருநாகல் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads