யாழ்ப்பான மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை
யாழ்ப்பான மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட இந்து கலாச்சார பேரவையின் செயலாளர் எம்.ரி.எஸ். இராமச்சந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாண ஊடக மன்றத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை குறிப்பிட்டார்.வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்காக தனது கல்வி நிலையத்தில் 23 ஆயிரம் வரையானவர்கள் வெளிநாட்டு மொழியை கற்று நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.குறிப்பாக யாழ் மாவட்டத்திலுள்ள அதிக வசதி வாய்ப்பு படைத்த இளைஞர்கள் வெளிநாட்டு போதை பொருட்களை பயன்படுத்தி தம்மையும் தமது கலாச்சாரத்தையும் அழித்து வருகின்றனர்.எனவே குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், இராணுவ தலைமை அதிகாரி உள்ளட்டோர் தமது கல்வி நிலையங்கள் ஊடாக கருத்தமர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் போதைப் பொருள் பாவனையை யாழ் மாவட்டத்தில் கட்டுப்படுத்த முடியும் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.