சினிமா செய்திகள்
நடிகர் சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு
1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான
குணசேகரன் மற்றும் அரசு ஆடப்போகிற கேமை விட அப்பத்தாவின் கேம் பெரிது
எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் தற்போது விறுவிறுப்பு குறைவது போல் தெரிகிறது. அரைச்ச மாவையை அரைத்து எல்லாருமே  சொத்துக்கா
பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்
பிரபு  நடித்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாக தான் இருக்கும். இவர் 215 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும்
நிமிஷா சஜயனின் சர்ச்சைக்குரிய கவிதை
தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில்நிமிஷா சஜயன் கதாநாயகியா
பொன்னியின் செல்வன்2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு
பொன்னியின் செல்வன் -1 படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகு , தனது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்விக்க பொன்னியின் செல்வன் -2 உடன் நட்
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
மனம் கவர்ந்த போட்டியாளர் வெளியேறியதால் கதறும் கோமாளிகள்
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் நடைபெறும். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டவர் யார் என
மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு
மலையாள நடிகர் இன்னசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில்
சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்த சமந்தா
முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சைக்கு பின் தேறி உள்ளார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்
படப்பிடிப்பில் விபத்து - நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம்
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது 'படே மியான் சோட் மியான்' என்ற இ
'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வீடியோ இன்று வெளியாகும்
சென்னை, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்த
ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கார் விருது கிடைத்தது -  அஜய் தேவ்கான்
தமிழல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் இந்தியில் அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிப்பில் போலா என்ற படமாக எடுக்கபட்டு உள்ளது. இந
Ads
 ·   · 656 news
  •  · 16 friends
  • S

    24 followers

யாழ். இளைஞனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சம்பவ இடத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளி பதிவின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

  

சம்பவம் தொடர்பில் பதிவாகிய சிசிரிவி காணொளி பதிவை சான்றுப்பொருளாக நீதிமன்றில் முற்படுத்த உத்தரவிட்ட நீதிவான், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த அன்னலிங்கம் கிரிசாந்தன் (வயது-38) என்ற அலுமினிய தள வேலை ஒப்பந்தக்காரரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்.நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்தவரும் அவரோடு நெருக்கமுள்ள நால்வரும் மது அருந்தியுள்ளனர். அதன்போது அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் உயிரிழந்தவருடன் சென்ற ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கட்டட வேலைத் தளத்துக்குச் சென்ற அவர் மூன்றாம் மாடியிலிருந்து நிலைதடுமாறி வீழ்ந்துள்ளார்.

படிக்கட்டுகளில் வீழ்ந்த அவர் கீழ் தளம் வரை சறுக்கி வந்து பாதுகாப்பு கம்புகள் பொருத்தப்படாததால் படிக்கட்டுகளின் வெளிப்பகுதியில் சிக்குண்டுள்ளார்.

அதன்போது அவரது தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக அதிகளவு குருதிப் போக்கினால் உயிரிழந்துள்ளார் என்பது சம்பவ இட விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஹோட்டலில் இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் எட்டுப் பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் பிறிதொரு வழக்குத் தாக்கல் செய்து நாளைய தினம் சனிக்கிழமை நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் கூறினர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 163
  • More
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads