Category:
Created:
Updated:
கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பமான பண்பாட்டு பேரணி A9 வீதி ஊடாக பசுமை பூங்காவை சென்றடைந்தது.கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.பண்பாட்டு பேரணியில், காவடியாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், சிலம்பாட்டம், பொம்மையாட்டம், கரகாட்டம், தமிழ் இன்னியம், பறை ஆகியன அலங்கரித்ததுடன், தமிழ் பெரும் அரசர்களின் ஊர்தியும் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து நள்ளிரவு வரை காமன் கூத்து உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்வுகளும், கௌரவிப்புகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.