விவசாயிகளுக்கு சிறந்த சேதன உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - விவசாய அமைச்சர் உறுதி
விவசாயிகளுக்கு சிறந்த சேதன உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். இந்த பருவத்தில் விவசாயிகளுக்கு சேதன உரமாக ஏரிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் இருந்து வண்டல் மற்றும் மண்ணை வழங்க யாருக்கும் இடமில்லை என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பருவத்தில் நெல் செய்கைக்கு 70% இரசாயன உரம் மற்றும் 30% சேதன உரத்தைப் பயன்படுத்த விவசாய துறை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இந்த நடவடிக்கையின் கீழ் விவசாயிகளுக்கு சிறந்த சேதன உரம் வழங்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் போகத்தில் நெல் செய்கைக்கு சேதன உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியமாக 20,000 ரூபா வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். யூரியா உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு தனியான மானியம் வழங்கப்படமாட்டாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.