Ads
கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் - சாணக்கியன்
கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக கிழக்கு மாகாண ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார், ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை. வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை என்றும் கூறினார்.
Info
Ads
Latest News
Ads