யாழ் கோட்டைப் பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது.
"யாழின் புராதான சின்னமாகக் காணப்படும் யாழ்.கோட்டைப் பகுதியிலே மிகப்பெரியளவிலான கலாசார சீரழிவுகலும், போதைப்பொருள் பாவனைகளும் இடம்பெறுகின்றதாக பல்வேறு சமூக ஆர்வலர்களால் எமக்கு சுட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன. இது பல்வேறு மட்டங்களில் இதன் பிரதிபலிப்பு உணரப்பட்ட நிலையில் பொலிஸாருடனும் இது தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் தொடர்புகளை மேற்கொண்டு இதனை கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.நீதிபதிகளும் இது தொடர்பாக யாழ்.மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். யாழ். கோட்டைப் பகுதியினை சுற்றி இருக்கின்ற பற்றைக்காடுகளை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதனடிப்படையில் நான் இன்றைய தினம் நேரடியாக கோட்டைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெறுகின்ற விடயங்களை அவதானித்தேன். இதன்போது எங்கள் கண் முன்னே சமூதாய சீரழிவுகளும்,போதைப்பொருள் பாவனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.எனவே விரைவாக குறித்த பற்றைக்காடுகளை அகற்றி துப்பவரவு செய்கின்ற நடவடிக்கையினை எடுக்க இருக்கின்றோம். இது தொடர்பாக நான் தொல்லியல் திணைக்களத்துடன் பேசியிருக்கின்றேன். அவர்களும் முழுமையான ஒத்துழைப்பினை தர தயாராக இருக்கிறார்கள்.இந்த செயற்திட்டத்தினை செயற்படுத்த தமிழ் மக்கள் யாராவது முன் வருவார்களாக இருந்தால், அதுவும் எமக்கு உதவியாக இருக்கும். இதனை நாங்கள் துப்பரவு செய்ததும் தொடர்ச்சியாக மாநகரசபையின் கண்காணிப்பிற்குள் கொண்டு வருவதற்கு விரும்புகிறோம். எனவே எதிர்காலத்தில் இந்த பகுதி திடீர் திடீரென பொலிஸ் உடனான எங்கள் சுற்று வளைப்புக்கள், கண்காணிப்பு பணிகளுக்குள் உள்ளாக்கப்படும் என பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் என்றார்."