சீன தேசிய நாள் கொண்டாட்டத்திற்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து போராட்டம்
சீனாவில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் 20-வது தேசிய மாநாட்டுக்கு அந்நாடு தயாராகி வருகிறது. இதில், அதிபர் ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக நீடிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் நடந்த தேசிய தினத்திற்கு எதிராக உலகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் மா சேதுங் போதனைகளின்படி நாடு முழுவதும் பரவலாக மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். 1949-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சீனாவின் புதிய பிரதமரான மா சேதுங் சீன தேசிய கொடியை, டையனமென் சதுக்கத்தில் ஏற்றினார்.
சீன மக்கள் குடியரசு என்ற புதிய கம்யூனிஸ்டு நாடு பிறந்துள்ளது என அறிவிப்பும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து, அடுத்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, புதிய அரசானது சீனாவின் தேசிய நாளாக அக்டோபர் 1-ம் தேதியை கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றியது.