முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்
நேற்று (1) நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இந்த இவ்வாறு தெரிவித்தார். " 5 முதல் 6 லீற்றர் பெற்றோலை வைத்துக் கொண்டு வாடகைக்கு முச்சக்கரவண்டி செலுத்துவதை விடுத்து வீட்டு வேலைகளுக்கு கூட போதாது. எனினும், வீதிகளில் முச்சக்கர வண்டிகள் ஏராளமாக ஓடுகின்றன. எப்படி ஹயர் ஓடுவது. மற்றவர்கள் 450 ரூபாவுக்கு பெற்றோல் அடித்த போது, நாங்கள் 500 அல்லது 550 ரூபாவுக்கு அடித்தோம்.
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு கையில் ஏதாவது கொடுத்து, வேறொருவரின் QR குறியீட்டை பயன்படுத்திதான் இந்த தொழிலை செய்து வருகிறோம். இந்த சூழலில் 40 ரூபாய் விலை குறைப்பின் ஊடாக எமக்கு எவ்வித கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது."
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான பெற்றோல் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.