சினிமா செய்திகள்
'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது
'தமிழ்படம்' புகழ் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'. இந்த திரைப்படத்தில் மகிமா நம்பியார், ரம்யா ந
'கனெக்ட்' படத்தின் டிரைலர் அப்டேட்
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்
'வால்டேர் வீரய்யா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இ
அவர் ஒரு சைக்கோ என கணவரை பற்றி கூறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நடிகை கவுதம
அழகிய உடையில் தமன்னா
சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வ
தளபதி 67 படத்தில் இணைந்த பிரியா ஆனந்த்
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
என் அடுத்த படத்தின் ஹீரோ யோகி பாபுதான் - ஹெச் வினோத் தகவல்
ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒர
அட்டை படத்திற்கு செம ஸ்டைல் காட்டிய ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அ
இலியானா பகிர்ந்த போட்டோக்கள்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார
திருமணத்தின் போதும் உருவ கேலி செய்தார்கள்… மஞ்சிமா மோகன்
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது
இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடிய
நடிகை ஹன்சிகாவுக்கு இன்று திருமணம்
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர்
Ads
 ·   · 52 news
 • 1 members
 •  · 0 friends

யாழ்,அரியாலையில் ஐந்நூறு(500) குடும்பங்களுக்கு குடிநீர் வசதி!

யாழ் அரியாலை பகுதியில் குடிநீர் வசதியின்றி நீண்ட காலமாக கஷ்டப்பட்டு வந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடி நீர் பெறுவதற்காக குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தித் தருமாறு அரியாலை ஜே/96,97 கிராம சேவையாளர் பிரிவவுகளை உள்ளடக்கிய கலைவாணி சனசமூக நிலையத்தின் செயலாளர் திரு த.பிரவீன் அவர்கள் பூமணி அம்மா அறக்கட்களையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வட மாகாணசபையின் யாழ், மாவட்ட உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


குறித்த விடயத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,இலங்கை (ITR) பணிப்பாளருமான யாழ்,தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு. விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, ருபா இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம்(265000.00) செலவில் அரியாலை கலைவாணி சனசமூக நிலையத்திற்கு சொந்தமான  சின்னாலங்கண்டு வீதியில் உள்ள காணியில் அறக்கட்டளையால் குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தி, குடி நீர்த்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


குறித்த பகுதியில் உள்ள பொன்னம்பலம் வீதி, சின்னாலங்கண்டு வீதி,முள்ளி வீதி,கலைவாணி வீதி,கேணியடி வீதி,A9 வீதி வீதி, குகன் வீதி, நெடுங்குளம் வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், குடிநீர் பெறுவதற்காக இக் குடிநீர்த் திட்டத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா அவர்கள் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து,பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து மக்கள் பாவனைக்காக கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் கையளித்தார். 


குறித்த குடிநீர்த் திட்டத்துக்கான நிதிப் பங்களிப்பினை கனடா ரொறண்டோவைச் சேர்ந்த பூமணி அம்மா அறக்கட்டளையின் தீவிர செயற்ப்பாட்டாளரும்(ITR) வானொலி சேவையின் தீவிர அபிமானியுமான திரு,திருமதி மோகனதாஸ் சாந்தகுமாரி தம்பதியினரின் முப்பத்தியொராம் ஆண்டு திருமண நன்நாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.


கலைவாணி சனசமூக நிலையத் தலைவர் திரு ஜெ.தருமராஜா தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் கலைவாணி முன்பள்ளி சிறார்களுக்கான கலை நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு பெற்றோருக்கான கலை நிகழ்வுடன் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றன.இன்றைய நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,இணைப்பாளர்,T.ஜோசேப் சனசமூக நிலையத்தின் செயலாளர் த.பிரவீன்,பொருளாளர் இ.சுந்தரகுமார் உட்பட பல பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 87
 • More
Attachments
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads