Ads
காரின் பின் பக்கம் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்: மீறினால் அபராதம்
கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட்டு அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக நிறுவவேண்டும் என்று இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அக்டோபர் 5 கடைசி தேதி என்று கூறியுள்ளது. இந்திய தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து, இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த விதிகளை விதித்துள்ளது.
இது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி கூறுகையில், காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
Info
Ads
Latest News
Ads