Category:
Created:
Updated:
உளுந்தூர்பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீ பிடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் புருஷோத்தமன் என்பவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த ஸ்கூட்டர் தீப்பிடித்ததை அடுத்து புருசோத்தமன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஸ்கூட்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.