Category:
Created:
Updated:
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று (20) சந்திப்பொன்று நடைபெற்றது.இச்சந்திப்பில் பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார மற்றும் அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் ஜேம்ஸ் கிளவெலி (James cleverly) ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வு கடந்த 18ஆம் திகதி சார்ளி இல்லத்தில் நடைபெற்றது.இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பங்கேற்றதோடு, உலக நாட்டு தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் இதன்போது ஜனாதிபதிக்கு கிடைத்தது.