Ads
புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்படும் அபாயம்
தற்போதுள்ள ஊழியர் வெற்றிடங்கள் காரணமாக எதிர்காலத்தில் பல புகையிரத பயணங்களை இரத்துச் செய்ய நேரிடும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதால், புகையிரத திணைக்களத்தில் ஏராளமானோர் ஓய்வு பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் சுமார் 50 வீதமானோர் ஓய்வு பெறப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வெற்றிடங்கள் இரட்டிப்பாகும் போது பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்று ஒரு கட்டுப்பாட்டாளர் பணியமர்த்தப்பட்டால், அவர் தலைமை கட்டுப்பாட்டாளராக பணியாற்ற 7 ஆண்டுகள் ஆகும். மேலும், ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் டிரைவர்கள் மற்றும் இளநிலை பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
Info
Ads
Latest News
Ads