இந்தியாவில் முதல்முறையாக முழுமையான கை மாற்று அறுவை சிகிச்சை
ர்நாடக மாநிலத்தில் அமரேஷ் (25 வயது) என்ற ஒருவரும், ஈராக்கைச் சேர்ந்த யூசுப் ஹசன் சயீத் (29) என்பவரும் மின்சாரம் தாக்கி தங்கள் இரு கைகளையும் இழந்தனர்.
இவர்களுக்காக கேரளாவில் சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைந்த இருவரிடம் இருந்து கைகள் தானமாக பெறப்பட்டன.
இதையடுத்து அமரேசுக்கும், யூசுப் ஹசன் சயீத்துக்கும் கைமாற்று அறுவை சிகிச்சை (தோள்பட்டையில் இருந்து முழுக்கை) கொச்சியில் உள்ள அம்ரிதா ஆஸ்பத்திரியில் நடத்த முடிவானது. அதன்படி அவர்கள் 2 பேருக்கும் கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
அமரேசுக்கு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வினோத் (54) என்பவருடைய கைகள் பொருத்தப்பட்டுள்ளன. யூசுப் ஹசன் சயீத்துக்கு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆலப்புழையை சேர்ந்த அம்பிலி (39) என்ற பெண்ணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அமரேசுக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரம் தாக்கி கைகளை இழந்தார். ஈராக் தலைநகர் பாக்தாத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளரான யூசுப் ஹசன், சுவரில் டிரில்லரைக் கொண்டு துளையிட்டபோது மின்சாரம் தாக்கி கைகளைப்பறிகொடுத்தார்.