Category:
Created:
Updated:
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் தமிழ்நாடு முழுவதும் 327 அத்தியாவசியமான மருந்துகளை மக்களுக்கு தடையில்லாமல் கொடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் தமிழ்நாடு அரசை பொறுத்தவரை மருத்துவ சேவையை அப்பழுக்கற்ற சேவையாக செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மருந்து தடுப்பாடு என்ற சந்தேகம் தோன்றினால் கையிருப்பில் உள்ள மருந்துகளை காட்டுவதற்கு அவர்களை அழைத்து செல்கிறோம் என்றும் அவர் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.