Category:
Created:
Updated:
இரண்டு கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட 37,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் 100,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்கும் பணி இன்று (16) ஆரம்பமாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் டுவிட்டர் பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதவிர 40,000 மெட்ரிக் தொன்ன் டீசல் இறக்கும் பணியும் 02 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கைகள் நாளை (17) காலையுடன் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுக்கான கட்டணத்தை செலுத்திய பின்னர், டீசலை இறக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.