Category:
Created:
Updated:
தியாகி திலீபன் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது.ஈகை சுடர்களை மாவீரன் கப்டன் ஒளி வேந்தன் அவர்களின் தாயார் ரஞ்சனிதேவி அவர்களும் மாவீரன் கப்டன் தீவண்ணன் அவர்களின் தாயாரும் மாவீரன் வீரவங்கை ஒளிஅமுதனின் தாயாரும் மாவீரன் வீர வேங்கை தமிழ் மைந்தனின் தாயாரும் ஏற்றினர்.மலர்மாலைகளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி பூநகரி அவர்களின் தவிசாளர்கள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் அணிவித்தனர்.மலர் அஞ்சலிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.