Category:
Created:
Updated:
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி பாரிய விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் அது தொடர்பான சாட்சியங்களை மறைக்க சதி செய்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.