Category:
Created:
Updated:
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் நான்காவது நாளாகவும் இன்று(13) இடம்பெற்றது.கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி வாடியடி சந்தியில் காலை ஆம்பமானதை தொடர்ந்து, பரந்தன், கிளிநொச்சி நகர், முறிகண்டி, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டன.இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் நான்காவது நாள் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.