ஜனாதிபதி, பிரதமருக்குப் பதிலாக கைப்பாவைகள் - சஜித் பிரேமதாஸ
மக்களால் நிராகரிக்கப்பட்ட நிதியமைச்சரும், ஜனாதிபதியும், பிரதமரும் வெளியேறிச் சென்ற போதிலும் இன்று அவர்களின் கைப்பாவை ஒருவரை ஜனாதிபதியாக்கி, மொட்டு அரசாங்கம் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டை அழித்து வருவதாகவும், மக்கள் துன்பங்களை அநுபவிக்கும் வேளையிலும், காக்கை அரசாங்கம் தமக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அமைச்சசுப் பதவிகளை வழங்குவதன் மூலம் பெரும் வரப்பிரசாதங்களை வழங்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கொரோனா மரணத்தை தகனம் மற்றும் அடக்கம் செய்வது பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் சரியான முடிவை வழங்கியிருந்த போது, இந்த ஹீரோ தன் கருத்துப்படி செயற்பட்டதாகவும், இதனால் தான் மக்கள் சபித்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.
நாகராஜ கோலம் போட்டு பொய் கூறி நாட்டில் பீடனை ஏற்படாது என ஆடம்பரபட்டனர் எனவும்,அந்த சாபம் நாட்டையே பாதித்தது எனவும், இறுதியில் ஜனாதிபதிக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே,சாதாரண மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கோமாளித்தனங்களுக்கு இடமளிக்க முடியாது எனவும், எதிர்காலத்தில் பொது மக்களின் அரசாங்கத்தை அமைப்பதற்கு அணிதிரளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.